திரிவேணி கலா சங்கம்
திரிவேணி கலா சங்கம் புது தில்லியிலுள்ள ஒரு முக்கியமான கலாச்சார, கலை, கல்வி மையமாகும். 1950ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்திற்கு சுந்தரி கே. ஸ்ரீதரணி, நிறுவன இயக்குநராக இருந்தார். இது நான்கு கலைக்கூடங்கள், ஒரு அரங்கம், வெளிப்புற அரங்கம், திறந்தவெளி சிற்பக்கலைக் கூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர அதன் பல்வேறு கலைகளையும் இசை மற்றும் நடன வகுப்புகளையும் இயக்குகிறது. இது மாண்டி ஹவுஸ் வட்டச்சாலை மற்றும் பெங்காலி சந்தைக்கு இடையில் தான்சேன் மார்க்கில் அமைந்துள்ளது.
Read article